சூலூர்; சூலூர் வட்டார கோவில்களில் நடந்த பஜனை, முற்றோதல் மற்றும் அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சூலூர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில், காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் பஜனை நடந்தது. இதில், பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் பாடல்களை பாடி வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. சூலூர் பழைய அங்காளம்மன் கோவிலில், திருவாசகம் முற்றோதல், பாவைத்திருவிழா நடந்தன. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளால் பங்கேற்று அருளாசி வழங்கினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினர். சூலூர் அறுபடை முருக பக்தர்கள் குழு சார்மில், சூலூர் சிவன் கோவிலில், 53 ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது. ஆதீன பெரியவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.