மாமுனிவர் அகத்தியருக்கு குருபூஜை விழா கோலாகலமாக நடந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2026 05:01
கீழக்கரை: கீழக்கரை அருகே தென் பொதிகை தமிழ் மாமுனிவர் அகத்தியர் கோயில் உள்ளது. மார்கழி மாதத்தில் வரக்கூடிய சதுர்த்தி திதியும் ஆயில்ய நட்சத்திரமும் அகத்தியருக்கு குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. 9ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று காலை 6:00 மணிக்கு கோமாதா பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. காலை 10:30 மணிக்கு மூலவர் அகத்தியருக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த சாதுக்கள், துறவிகளுக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத் தலைவர் கணேசன், பெரியசாமி, பொருளாளர் பாண்டி, செயலாளர் கண்ணன் மற்றும் தியாகராஜ சுவாமி சீடர்கள், ஐயப்ப பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.