ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்க ஆண்டு விழாவில் நாமசங்கீர்த்தன இசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2026 11:01
ஆர்.எஸ்.புரம்: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கத்தின், 76வது ஆண்டு விழா, ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி குழுவினரின் நாமசங்கீர்த்தன இசை நிகழ்ச்சியுடன் பக்தர்கள் சூழ கோலாகலமாக நடந்தது. ஆர்.எஸ்.புரம் சுப்ரமணியம் சாலையிலுள்ள பலிஜநாயுடு திருமண மண்டபத்தில் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. 6 மணிக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா ஆவாஹனம் செய்து எழுந்தருளுவிக்கப்பட்டார். 6:30 க்கு மஹன்யாச ருத்ர ஜபம் நடந்தது. காலை 8 மணிக்கு ஆர்.எஸ்.புரம் சங்க கட்டடத்திலிருந்து பாலக்காடு ராஜன் குழுவினரின் செண்டைமேளம் இன்னிசையுடன் ஸ்ரீ ஐயப்பசுவாமியின் திருவாபரணம், கங்கா தீர்த்தத்துடன் பலிஜநாயுடு திருமணமண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டது. 8:30 மணிக்கு கட்டு நிறை துவங்கியது. 9 மணிக்கு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி குழுவினரின் நாமசங்கீர்த்தன இசை நிகழ்ச்சி நடந்தது. 10 மணிக்கு சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து கனகாபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. 11 மணிக்கு அன்ன தானம் ஆர்.எஸ்.புரம் மேற்கு ராமலிங்கம் சாலையிலுள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி ஹாலில் நடந்தது. மாலை 6:30 மணிக்கு வீரமணிராஜூ இசைக்கச்சேரி நடந்தது. திரளான பக்தர்களும் பங்கேற்று, அய்யப்பசுவாமியின் அருளை பெற்றனர்.