பரமக்குடியில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா; அனைத்து ஜீவ ராசிகளுக்கு படி அருளிய லீலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2026 11:01
பரமக்குடி; பரமக்குடி சிவன் கோயில்களில் கால பைரவ அஷ்டமி விழாவில் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படி அருளிய லீலையில் சிவபெருமான் வீதி உலா வந்தார்.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஹோமங்கள் நடந்தது. பின்னர் மகா பூர்ணாகுதிக்குப்பின் பல வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பிரியா விடையுடன் சந்திரசேகர சுவாமி மற்றும் விசாலாட்சி அம்பிகை தனித்தனி ரிஷப வாகனங்களிலும் பஞ்சமூர்த்திகளுடன் விதி உலா வந்தனர். *பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, மீனாட்சி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தனர். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசித்தனர். தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அரிசி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல் எமனேஸ்வரமுடையவர் கோயில் மற்றும் நயினார்கோவில் நாகநாத சுவாமி உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.