இடைக்காட்டூர் சர்ச்சில் பொங்கல் விழா வெளிநாட்டு பயணிகள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2026 12:01
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச் மற்றும் இடைக்காடர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த இடங்கள் உள்ளதால் தமிழக அரசு சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது. இங்குள்ள சர்ச்சில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு திருப்பலியில் தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு இடைக்காட்டூரில் உள்ள ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைப்பதற்கு முன்பாக அதற்கு தேவைப்படும் பொருட்களை சர்ச்சுக்கு கொண்டு வந்தனர். பெங்களூரு புனித பேதுரு குருத்துவ கல்லூரி பாதிரியார் சத்தியசீலன் அர்ச்சிப்பு செய்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரியா நாட்டு பாதிரியார்கள் கிளமன்ட்,எலியாஸ், அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் கார்லா இடா கேத்ரீன், மட்டும் அமெரிக்க பாதிரியார் தைனேஸ் அல்போன்ஸ் மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஜெரால்டுகயிர், கிளிண்டன் டிராகன் உள்ளிட்ட ஏராளமானோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு நடனமாடி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அருள் பணியாளர் ஜான் வசந்தகுமார் மற்றும் பாதிரியார் பிரின்ஸ் அருள் சகோதரர் நிகாத் மற்றும் கிராம மக்கள் அருள் சகோதரிகள் செய்திருந்தனர்.