பதிவு செய்த நாள்
07
ஜன
2013
10:01
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஸ்ரீகைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம், வரும், 18ம் தேதி நடைபெற உள்ளது. உத்திரமேரூரில், 1,200 ஆண்டுகளுக்கு முன், நத்திவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட, ஸ்ரீகைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், 200 ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. திருப்பணி முடிந்து வரும், 18ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, வரும், 16ம் தேதி காலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, 7:00 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை அலங்காரம், தீபாராதனை, 17ம் தேதி காலை, 8:00 மணிக்கு விசேஷ சந்தி, இரண்டாவது கால யாகசாலை பூஜை, கோபுர கலசங்கள் ப்ரதிஷ்டை, மாலை, 3வது கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடைபெறும். கும்பாபிஷேக தினமான, 18ம் தேதி காலை, நான்காவது கால அவப்ருதயாகசாலை பூஜை, மஹாபூர்ணாஹுதி, யாத்ராதான சங்கல்பம், 9:00 மணிக்கு அனைத்து கோபுரங்கள் கும்பாபிஷேகம், காலை, 9:30 மணிக்கு விநாயகர், சண்முகர், மூலவர், அம்பாள் சண்டிகேஸ்வரர் கும்பாபிஷேகம், பகல், 12:00 மணிக்கு மஹாபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு, 7:00 மணிக்கு ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.