பதிவு செய்த நாள்
07
ஜன
2013
10:01
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அடுத்த நானப்பரப்பு, மஹா மாரியம்மனுக்கு செந்தமான, 18 ஊர்களிலும் அம்மன் பாதுகாக்கும் பொருட்டு ஊர் சுற்றுப்பகுதி வலம் வரும் விதம்மாக ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முதல் வாரத்தில் இருந்து சுற்றுப்பொங்கல் திருவிழா நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டு பொங்கல் விழா துவங்கியுள்ளது. முதலில், கந்தம்பாளையம் பகுதியில் பொங்கல் விழா நடந்தது. அடுத்து, இந்தவாரம் வேலாயுதம்பாளையத்தில் சுற்றுப்பொங்கல் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள் நானப்பரப்பில் இருந்து அம்மனை, திருவிதி உலா கொண்டு வந்து கடைவீதி பிள்ளையார் கோவிலில் வைத்து, மூன்று நாட்கள் திருவிழா நடத்தி வருகின்றனர். மாரியம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு படையல் செய்து, வாணவேடிக்கை முழங்க கிராமிய கலை நிகழ்சிகளுடன் திருவிழா நடந்தது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வடிசோருடன் துவங்கி, திங்கள் கிழமை பொங்கல் விழா, செவ்வாய்கிழமை மாவிளக்கு, மூன்றாம் நாளக மஞ்சள் நன்னீராட்டு விழா மற்றும் கிடாய் வெட்டும் நிகழ்சிகளுடன் திருவிழா முடிவடையும்.