சிவகிரி: சிவகிரி அடுத்துள்ள தேவதானம் கல்லணை ஆற்றங்கரையில் ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக் கோயிலில் சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கடந்த சனிக்கிழமை கோயிலில் ராமர்,லட்சுமணன், சீதை, அனுமார் ஆகிய சன்னிதிகளில் உள்ள சுவாமிகளுக்கு 18 வகையான அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம், துளசி, வடை மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி முத்துசுவாமிகள், பக்த குழுவினர் செய்திருந்தனர்.