செஞ்சி: செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரதசப்தமி விழா நடந்தது.
அதனையொட்டி, நேற்று ஒரே நாளில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 7 வாகனங்களில் ரங்கநாதர் வீதியுலா நடந்தது. காலை 6:00 மணிக்கு சூரிய பிரபை, 8:00 மணிக்கு சேஷா வாகனம், 10:00 மணிக்கு கருட வாகனம், 12:00 மணிக்கு குதிரை வாகனம், 1:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், 2:00 மணிக்கு அனுமந்த வாகனம், 4:00 மணிக்கு யானை வாகனம், 6:00 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் ரங்கநாதர் மாட வீதிகள் வழியாக வலம் வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மஸ்தான் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.