பதிவு செய்த நாள்
31
ஜன
2026
12:01
திருப்பூர்;திருப்பூர் வட்டார சிவாலயங்களில் நேற்று தை மாத வளர்பிறை பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
அவ்வகையில், திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நந்தியம்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மேலும், மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவர் தம்பதி சமேதராக எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதேபோல, எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில், பழங்கரை பொன் சோளீஸ்வரர் கோவில், அலகுமலை ஆதி கைலாசநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், வெள்ளகோவில் – மயில்ரங்கம் வைத்தீஸ்வரர் கோவில், விராலிக்காடு, சென்னியாண்டவர் கோவில் – காசி விஸ்வநாதர் சன்னதி, டி.பி.ஏ. காலனி, காசி விஸ்வநாதர் கோவில், திருப்பூரில் லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், பூச்சக்காடு – காசி விஸ்வநாதர் சன்னதி, பல்லடம் – சித்தம்பலம் நவக்கிரக கோட்டை கோவில் உள்ளிட்ட திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் நேற்று பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இவற்றில, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.