Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூரில் இன்று தெப்ப உத்சவம் குன்றக்குடியில் தைப்பூச தேரோட்டம் குன்றக்குடியில் தைப்பூச தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் தங்க விமான கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் தங்க விமான கும்பாபிஷேகம்  யாகசாலை பூஜை துவக்கம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2026
11:02

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் தங்கவிமான கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு இன்று காலை சகஸ்ரநாம பாராயணம், சுதர்சன ஹோமம் நடைபெறுகிறது. நாளை காலை பூர்வாங்க பூஜை, மாலையில் யாகசாலை பூஜை துவங்கு கின்றன. தொடர்ந்து 8 கால பூஜை நடைபெற்று பிப்.6ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


சிவகங்கை சமஸ் தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மூலவர் விமானம் 108 அடி உயரத்தில் அஷ்டாங்க விமானமாக உள்ளது.


வரலாறு, புராணச் சிறப்பு மிக்கது. ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக மூன்று தளங்களாக அமைந்துள்ளது.அதில் உச்சித் தளமான முதல் நிலைக்கு தங்க தகடு வேயும் திருப்பணியை தேவஸ்தானம், ஹிந்து அறநிலையத்துறை, உபய தாரராக ஸ்ரீசவுமியநாரா யணப்பெருமாள் எம் பெருமனார் சாரிடபிள் ட்ரஸ்ட் செய்துவருகின்றனர்.


திருப்பணி நிறை வடைந்துள்ள நிலையில், தங்கத் தகடு வேயப்பட்டுள்ள விமானத்தின் முதல்நிலையில் உச்சியில் தங்கத்திலான ஸ்துாபியும், தொடர்ந்து பத்மம்,மகா பத்மம், கண்ணாடிச் சட்டம், பண்டியல் தகடு, கந்தர்வ கன்னிகள், நாசித் தலைகள், படிச்சட்டம் ஆகியவை தங்கத்தகடு வேயப்பட்டுள்ளது. திருப்பணி நிறைவடைந்ததை அடுத்து தற்போது கும்பாபிஷேகத்திற்காக பிரகாரத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது.


யாகசாலை தங்க வண்ண மண்டபம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் 24 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட பட்டாச்சார்யர்கள் யாகசாலை பூஜையில் பங்கேற்க உள்ள னர். இன்று (பிப்.1) காலை 8:00 மணிக்கு திருவீதி சகஸ்ர நாம பாராயணம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு யோகநரசிம்மர் சன்னதியில் உலக நன்மைக்காக திரு அஷ்டாட்சர சுதர்சன ஹோமங்கள் துவங்குகின்றன.


நாளை காலை 9:28 மணிக்கு ஆசார்யர் அழைப்பு, அனுக்ஞை, வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை நடைபெறும். மாலை 5:15 மணிக்கு மேல் யாகசாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு முதற்கால யாக பூஜைகள் துவங்குகின்றன.


தொடர்ந்து பிப்.3 காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலம், மாலை 4:00 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளும், பிப்.4ல் நான்கு, ஐந்தாம் கால யாக பூஜைகளும், பிப்.5ல் ஆறு, ஏழாம் கால யாகபூஜைகளும் துவங்குகின்றன. யாகசாலை பூஜைகளில் கோ பூஜை, கஜ பூஜை, அஷ்வ பூஜை, திவ்ய பிரபந்தம், வேதபாராயணம் நடைபெறும்.


பிப்.6 அதிகாலை 5:00 மணிக்கு புண்யாகவாசனம், சிறப்பு ேஹாமம், காலை 8:00 மணிக்கு யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடு, காலை 9:26 மணி முதல் காலை 10:18 மணிக்குள் தங்க விமானத்திற்கான கும்பாபிேஷகம் நடைபெறும்.


தொடர்ந்து காலை 10:40 மணிக்கு அலங் காரத் திருவாராதனம், யஜமானர் மரியாதை, காலை 11:50 மணிக்கு சர்வ தரி சனம் நடைபெறும். இரவு 8:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நடைபெறும். திருக்கோஷ்டியூர் நம்பிகள், எம் பெருமானார் தங்கப்பல்லக்குகளில் திருவீதி உலா நடைபெறும்.


ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் செய்து வருகின்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar