Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோமனூர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் ... சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி பெருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி பெருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
01:02

திருப்பதி;  திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி, ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 


ஒவ்வொரு ஆண்டும் மாசி பௌர்ணமி அன்று ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டியை கொண்டாடுவது வழக்கம்.. புராணங்களின்படி, இந்த புனிதத் தலம் ஸ்ரீ ராமகிருஷ்ண மகரிஷியின் தவ வலிமையால் உருவாக்கப்பட்டது. கோவில் அர்ச்சகர்களும் ஊழியர்களும் மந்திரங்களை உச்சரித்தவாறு, ஸ்ரீ வாரி கோவிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு காலை 11 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்தத்தை அடைந்தனர். அங்கு, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மற்றும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் சிலைகளுக்கு பால், தயிர், சந்தனக் குழம்பு மற்றும் பிற நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நைவேத்தியங்கள் படைக்கப்பட்டன.


பாவவிநாசம் அணையில், ஸ்ரீ வாரி சேவகர்கள் ராமகிருஷ்ண தீர்த்தத்திற்குச் செல்லும் பக்தர்களுக்குப் பொங்கல், உப்புமா, சாம்பார் சாதம், தயிர் சாதம், புளியோதரை பொட்டலங்கள், குடிநீர் மற்றும் மோர் பொட்டலங்களை விநியோகித்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் மருத்துவத் துறை சார்பில் அந்த இடத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. தேவஸ்தான பொறியியல் மற்றும் வனத்துறைகள் பக்தர்களின் வசதிக்காக வழியில் பல இடங்களில் நடைபாதைகளை அமைத்திருந்தன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar