Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராமநாதபுரம் கோயில்களில் தைப்பூச ... 101 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் 101 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரன் குன்று கோயிலில் தைப்பூச தேரோட்டம் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
குமரன் குன்று கோயிலில் தைப்பூச தேரோட்டம் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
01:02

அன்னூர்: குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.


பிரசித்தி பெற்ற குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோயிலில், கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் தேர்த் திருவிழா துவங்கியது. 31ம் தேதி வரை தினமும் காலை 11:00 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடந்தது. 31ம் தேதி இரவு அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.


கடந்த 1ம் தேதி காலை 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது, காலை 9:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேதர கல்யாண சுப்பிரமணியசாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.


அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார், செயல் அலுவலர் சபரீஸ்வரி, அறங்காவலர்கள், முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து, தேரை இழுத்தனர்.


பல ஆயிரம் பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். தேர் மீது பழம், எலுமிச்சை ஆகியவற்றை வீசி கல்யாண சுப்பிரமணிய சாமியை வணங்கினர்.


ஏராளமானோர் உணவு, நீர்மோர், குளிர்பானம் ஆகிவற்றை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கினர். முன்னதாக இசைக்கு ஏற்ப பக்தர்கள் நடனமாடி சென்றனர். இரவு 8:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.


இன்று தெப்போற்சவமும், நாளை மஞ்சள் நீர் உற்சவமும், வரும் 7ம் தேதி மறு பூஜையும் நடைபெறுகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
எஸ்.புதுார்: எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் தைப் பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
செய்யூர்: கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், 50ம் ஆண்டு தைப்பூச தெப்ப உத்சவ விழா விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், தைப்பூச தெப்போத்சவம் கண்டார்.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ... மேலும்
 
temple news
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவில் தெப்போற்சவம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar