Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டலம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு ... குமரன் குன்று கோயிலில் தைப்பூச தேரோட்டம் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு குமரன் குன்று கோயிலில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
01:02

ராமநாதபுரம்: தைப்பூச விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட கோயில்களில் கோலாகலமாக விழா கொண்டாடப்பட்டது.


ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் உள்ள மயூரநாத பெருமான், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குடம், மயில் காவடி எடுத்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட பெரிய கிரைனில் பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்து வந்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் அ.தி.மு.க., நகர் செயலாளர் பால்பாண்டியன் செய்திருந்தார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமி, மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா காவடி மற்றும் பூஜைகளை துவக்கி வைத்தனர்.


எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலாளர் மலேசியா பாண்டி, மன்ற துணைச் செயலாளர் சாமிநாதன், மாணவர் அணி துணை செயலாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் சரவணகுமார், அரவிந்த், மருதுபாண்டியன், ஜானகிராமன் உட்பட ஏராளமான அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.


* ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பத்து நாட்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் தினமும் மாலை ஹோமம், அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தைப்பூசத்தையொட்டி பால்குட அபிேஷகம் நடந்தது. மாலை வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நான்கு ரதவீதிகளில் உற்ஸவர் பவனி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


* பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலில், காலை தண்டாயுத பாணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள முருகன் கோயிலில் சேர்க்கை ஆகினர். அங்கு தீர்த்த வாரி உற்ஸவம் நடந்தது. இரவு ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி அம்பாள் கோயிலை அடைந்தனர்.


* எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் முருகன் வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு மயில் வாகனத்தில் கயிலை வாத்தியம் முழங்க சுவாமி வீதி வலம் வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar