உடுமலை: உடுமலை அருகே ராகல்பாவி கிராமத்தில், பாரம்பரியமாக, தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. தொழில் ரீதியாக பல்வேறு பகுதிகளுக்கு, இடம் பெயர்ந்தவர்களும், இவ்விழாவையொட்டி, கிராமத்துக்கு வருகின்றனர். பொது இடத்தில், 60 அடி உயரத்துக்கு, மண்ணில், வண்ண, கோலப்பொடிகளால், தேர் வரைந்து, முருகப்பெருமானை தேரில் வைத்து, மாவிளக்கு, பொங்கல், படையல் வைத்து, கும்மி பாடல்களுடன், விழாவை கொண்டாடுகின்றனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: பழநி மலைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கிறார்கள். இவ்வாறு, யாத்திரை நிறைவு பெற்று கிராமத்துக்கு திரும்பியதும், ராகல்பாவி கிராமத்தில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர், சார்பில், தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. நுாறு ஆண்டுகளுக்கு மேலாக, இவ்விழாவை பாரம்பரியம் மாறாமல், சிறப்பித்து வருகின்றனர். இவ்வாறு, தெரிவித்தனர்.