ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கட ஹர சதுர்த்தி சிறப்பு ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2026 05:02
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று வியாழக்கிழமை சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அஞ்சி அஞ்சி கணபதி கோயிலில், தலைமை அர்ச்சகர் எஸ்.எம்.கே. ஸ்ரீனு குருக்கள் மற்றும் கோயில் அர்ச்சகர் அர்த்தகிரி சுவாமி ஆகியோரின் தலைமையில் சங்கடஹர சதுர்த்தி ஹோமம் நடத்தப்பட்டது. முன்னதாக அஞ்சி அஞ்சி விநாயகர் சன்னதி அருகில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஹோமம் வளர்த்து பூர்ணாவூதி செய்தனர். இந்த சிறப்பு உற்சவத்தில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.