திருப்புட்குழி கோவில் சுவரில் செடிகள் அகற்ற பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2026 11:02
காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜய ராகவ பெருமாள் கோவில் மதில் சுவரில் வளர்ந்துள்ள அரசமர செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில், 58 வது திவ்ய தேசமாக விளங்கி வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் மதில் சுவரில் அரசமர செடிகள் வளர்கின்றன. வேர்கள் வேரூன்றுவதால் சுவரில் விரிசல் ஏற்பட்டு வலுவிழக்கும் சூழல் உள்ளது. கோவில் மதில் சுவரில் வளர்ந்துள்ள அரச மர செடிகளை அகற்ற ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.