சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2026 01:02
மயிலாடுதுறை; சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் உலக நன்மை, குடும்ப சேமம் வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் லோகநாயகி சமேத திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் 28வது தலமான இக்கோவிலில் ஆண்டுதோறும் தை கடை வெள்ளி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று கோவிலின் தென்புறம் அமைந்துள்ள லோகநாயகி தாயார் சன்னதியில் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், குடும்ப ஷேமம் வேண்டியும் திருவிளக்கு பூஜை செய்தனர். அப்போது 1008 தாயார் சகஸ்ரநாம பூஜைகள், தீப லட்சுமி பூஜையும் நடைபெற்றது பூஜைகளை கோவிலின் தலைமை பட்டாச்சாரியார் செய்து வைத்தார். இதில் சீர்காழி தாலுக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திரளான பெண்கள் கலந்து கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை செய்து பெருமாளையும் தாயாரையும் வழிபட்டனர்.