Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் ... பழநி முருகன் கோயில் படிப்பாதையில் கற்சிலை வேல் பிரதிஷ்டை பழநி முருகன் கோயில் படிப்பாதையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருச்செந்தூர் செப்பேடு ஆய்வு
எழுத்தின் அளவு:
பழநியில் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருச்செந்தூர் செப்பேடு ஆய்வு

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
10:02

பழநி; பழநியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கி.பி., பதினெட்டாம் நூற்றாண்டு திருச்செந்தூர் செப்பேடு குறித்து ஆய்வு செய்து கோயில் நிலம் விலை கிரையம் செய்யப்பட்டது. என தெரிவித்தார்.


பழநியில் தொல்லியல் ஆய்வாளர் கி.பி., 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த செப்புபட்டயம் தூத்துக்குடி மாவட்டம் ஆதிநாதபுரத்தைச் சேர்ந்த கைலாச குடும்ப குடும்பத்தினர் பாதுகாத்து வைத்திருந்தனர் அதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில், "திருச்செந்தூர் கோயில் நிலம் தென்இருகரைநாட்டு குடும்பர்களுக்கு விலை கிரையம் செய்து கொடுத்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செப்பேடு 28.7 செ.மீ.,உயரமும், 17.5 செ.மீ., அகலமும், 352 கிராம் எடையும் உடையது. செப்பேட்டின் இருபுறமும் 61 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. கடவுள் துணை என தொடங்குகிறது. செப்பேடு சாலிவாகன ஆண்டாக 1660, கொல்லம் ஆண்டாக 914 தமிழ் ஆண்டாக காளயூத்தி குறிப்பிடப்படுகிறது. ஆவணி 17ஆம் தேதி பவுர்ணமி நாளில், 1738,ஆக., 29 அன்று சந்திர கிரகணத்தன்று எழுதப்பட்டுள்ளது. அன்றைய திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாக தலத்தார், தானத்தார், நாட்டுக்கணக்கு, ஆகிய பிள்ளை, நம்பியார், பண்டாரம், செட்டியார், கரையாளர் என வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த 12 பேர், திருச்செந்தூர் முருகன் கோயில் நிலத்தை தென் இருகரை நாட்டு குடும்பர்கள் ஒன்பது பேர்களுக்கு விலை கிரையம் செய்து கொடுத்தனர். கோயில் நிலத்திற்கு, 19 பொன்னும், ஒரு பணமும் விலை நிர்ணயம் செய்து அதை ரொக்கமாக பெற்றுக்கொண்டு தாமிர பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர். இதில் 12 கோயில் நிர்வாக அதிகாரிகள் நிலத்தைப் பெற்றுக் பெற்றுக் கொண்டவர்கள் கையெழுத்திட்டு சாட்சிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் சமுதாயத்தில் நிலவிய ஜாதி கட்டமைப்பை செப்பேடு உணர்த்துகிறது. செப்பேட்டில் திருச்செந்தூர் முருகனை இளையநயினார், கோயில் நிலத்தை திருவிடையாட்டம், திருச்செந்தூரை மாகாளி சதுர்வேத மங்கலம் என குறிப்பிடுகிறது. சந்திர கிரக நாட்களை புண்ணிய காலம் என கருதி பண்டைய தமிழர்கள் சந்திர கிரகண நாட்களை முன்கூட்டியே அறியும் வானவியல் அறிவை பழந்தமிழர்கள் பெற்று இருந்ததை என நிரூபிக்கிறது. பட்டயத்தை ஆய்வு செய்ய கொடுத்த குடும்பத்தினர் தென்கரைக்காட்டு பச்சேரி சித்திரபுத்திர குடும்பம் மகன் மாடக்குடும்பன் வழிவந்தவர்கள் என குறிப்பிட்டனர்." என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar