திருப்பூர்: காங்கயம், காடையூரில் உள்ள, காடையீஸ்வரர் கோவிலில், புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, நேற்று வெள்ளோட்டம் நடந்தது.
பழைய தேர்களுக்கு பதிலாக, இரும்பு சக்கரம் பொருத்தி, பழமை மாறாமல் தேர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. விநாயகர், காடையீஸ்வரர், பங்கசாட்சியம்மன் என, மூன்று தேர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சித்ரா பவுர்ணமி நாளில் தேரோட்டம் நடக்க உள்ளது. தேர் திருப்பணி நிறைவு பெற்ற நிலையில் நேற்று, தேர் வெள்ளோட்டம் நடந்தது. பூர்வாங்க கிரியைகளுடன், விநாயகர் வழிபாட்டுடன், தேர்களுக்கு கலசாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், புதிய தேர் வெள்ளோட்டத்தில், பக்தி கோஷமிட்டபடி தேர் வடம் பிடித்து இழுத்தனர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.