கடலுார்: கடலுார் நாகம்மன் கோவில் கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜையுடன் துவங்கியது.
கடலுார் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை யாகசாலை நிர்மானம், கணபதி பூஜை, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால பூஜை நடந்தது. இன்று 10ம் தேதி காலை 8:00 மணிக்கு விசேஷ சந்தி, இரண்டாம் கால பூஜை, மாலை 5:30 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, மூலமந்திர ஹோமம், தீபாராதனை நடக்கிறது. நாளை 11ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால பூஜை, 9:00 மணிக்கு யாத்ராதானம் புறப்பாடு, 10:00 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு மூலவர் நாகம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.