சோம்பட்டு பவழக்குடி சித்தர் கோவிலில் குரு பூஜை விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2026 10:02
திருக்கனுார்: சோம்பட்டு பவழக்குடி சித்தர் கோவிலில், 219வது குரு பூஜை விழா நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழக்குடி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பவழக்குடி சித்தர் ஜீவ சமாதி அடைந்த 219வது ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை யாக வேள்வியுடன் கூடிய அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை, சிவன் அடியார்கள் வழிபாடு நடந்தது. இதில், அமைச்சர் நமச்சிவாயம் ,சோம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை பவழக்குடி சித்தர் திருத்தொண்டு சபை மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.