Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் வரும் ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வந்த 1000 கிலோ மீட்டர் ஷிவாங்கா சிவ யாத்திரை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வந்த 1000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துளு ஆன்மிக வழிபாட்டின் ‘ஆழமான தத்துவம்’
எழுத்தின் அளவு:
துளு ஆன்மிக வழிபாட்டின் ‘ஆழமான தத்துவம்’

பதிவு செய்த நாள்

10 பிப்
2026
12:02

காந்தாரா மூலம் துளு நாட்டின் தெய்வ வழிபாடும், தெய்வங்களும் உலக அளவில் பிரபலமடைந்தன. கர்நாடகாவின் கடலோர பகுதியே துளுநாடு என, அழைக்கப்படுகிறது. இங்கு வசிக்கக்கூடிய மக்கள், துளு மொழி பேசக்கூடியவர்கள். மேலும், அதீத தெய்வ நம்பிக்கை உடையவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவர். இவர்களின் தெய்வ வழிபாடு தனித்துவமானது.


இங்கு தெய்வம், கோவில்களில் இருப்பது ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் அடர்ந்த காடுகளில் எல்லை சாமிகளாக தெய்வங்கள் உள்ளன. இங்கு பஞ்சுருளி, குளிகா, கொரகாஜ்ஜா போன்றவை முக்கிய தெய்வங்களாக வழிபடப்படுகின்றன.


நம்பிக்கை கோவிலுக்கு சென்று கடவுளிடம் வரம் கேட்கலாம்; ஆனால், தெய்வங்களிடம் பொய் கூற முடியாது என்பது நம்பிக்கை. சிவபெருமானின் மறுஉருவமாக வணங்கப்படும் பஞ்சுருளி கருணையின் வடிவம், விவசாயத்தை காப்பதாகவும் நம்பப்படுகிறது.


எல்லையை காக்கும் வீரம் பொருந்திய தெய்வமான குளிகா, தீய சக்திகளை வேரறுப்பதில் வல்லவர். இத்தெய்வங்கள், ‘பூத கோலா’ என்ற சடங்கின் போது நேரில் வந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். இந்த துளு ஆன்மிக வழிபாட்டின் ஆழமான தத்துவம் என்னவென்றால், தெய்வம் என்பது எங்கோ துாரத்தில் இல்லை; அது நம்மை சுற்றியுள்ள இயற்கையை சார்ந்தே இருக்கிறது என்பதே.


வழிபாட்டு முறை மரத்தடியில் சிறிய கற்களை வைத்து தெய்வ வழிபாடு செய்யப்படும். இங்கு மந்திரங்களை விட, உண்மையான பக்தியும், துாய்மையான மனமுமே, தெய்வங்களை மகிழ்விக்கும் வழிகள். தர்மத்தைக் காப்பவனை, தர்மம் எப்போதும் காக்கும். இக்கட்டான சூழலில் இருப்பவர்கள் இத்தெய்வங்களை மனதார வேண்டினால், அவை நிழலாய் வந்து காக்கும் என்பது நம்பிக்கை.


துளு நாட்டில் தெய்வ வழிபாடு என்பது வெறும் ஆன்மிகம் மட்டுமல்ல. மாறாக கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை பிரதிபலிப்பதாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இங்குள்ள தெய்வங்களை யாராவது பழித்தால், அ வர்களுக்கு தக்க தண்டனை நிச்சயம் கிடைக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; நெடுங்குன்றம் ஸ்ரீ ராமச்சந்திரப் பெருமாள் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar