திருவாடானை: திருவாடானை அருகே மணிகண்டி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க மழை வேண்டியும் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த பூஜையில், திருவடிமிதியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றினர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.