Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... அங்காளம்மன் கோவிலில் மாசிமக தேர் திருவிழா: இன்று கொடியேற்றம் அங்காளம்மன் கோவிலில் மாசிமக தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி: சிவன் கோயில்களில் சனி பிரதோஷ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி: சிவன் கோயில்களில் சனி பிரதோஷ விழா

பதிவு செய்த நாள்

15 பிப்
2026
11:02

பரமக்குடி: பரமக்குடியில் விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு மாலை அபிஷேகம் நடந்து, சுவாமிகள் ரிஷப வாகனத்தில் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர், நயினார்கோவில் நாகநாத சுவாமி, பெருங்கரை அட்டாள சொக்கநாதர் உட்பட அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க பிரார்த்தனை செய்தனர்.


திருவா டானை: ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ் வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவசாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


திருப்புல்லாணி: ரெகுநாதபுரம் அருகே ராணி மங்கம்மாள் சாலை செல்லும் வழியில் வண்ணாங்குண்டு கிராமத்தில் குச்சிலியமடம் மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான ஆலமரத்தின் கீழ் உள்ள நாகேஸ்வரர் பெருமானுக்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டுமூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதுபோன்று மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு மூலவர், நந்தி பகவானுக்கு அபிேஷகம் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar