Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி: சிவன் கோயில்களில் சனி ... மயில் வாகனத்திற்கு நுாற்றாண்டு விழா மயில் வாகனத்திற்கு நுாற்றாண்டு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் மாசிமக தேர் திருவிழா: இன்று கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் கோவிலில் மாசிமக தேர் திருவிழா: இன்று கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2026
11:02

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 13 நாள் மாசி பெருவிழா இன்று (15ம் தேதி) அங்காளம்மன், கோபால விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேக, அலங்காரமும் தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு கொடியேற்றமும், 9:00 மணிக்கு சக்தி கரகம் ஊர்வலமும் நடைபெற உள்ளது.


நாளை 16ம் தேதி காலை 9:00 மணிக்கு மயானக்கொள்ளை, 19ம் தேதி மாலை 3:00 மணிக்கு தீமிதி விழா, 21ம் தேதி 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


மேல்மலையனுார் கோவில் புராணத்தின் படி மயானக் கொள்ளையன்று விஸ்வரூபம் எடுத்து பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் ஒன்று கூடி தேரின் பாகங்களாக மாறி விழா எடுக்கின்றனர்.


இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர் வடிவமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிய தேர் கட்டும் பணி கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.


விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளர் சதீஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar