மெய்யர் அய்யனார் கோயிலில் மகாசிவராத்திரி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2026 03:02
காரைக்குடி; காரைக்குடி சங்கந்திடலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது.
காரைக்குடி அருகேயுள்ள சங்கந்திடல் பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோயிலில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு, பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், கரும்புத் தொட்டில் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோயிலில் தேரோட்டம் நடந்தது. இதில், சங்கங்திடல், காரைக்குடி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.