ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் கீழக்கோட்டை காலபைரவர் கோயில் நாலாம் ஆண்டு சிவராத்திரி விழா நடைபெற்றது. முன்னதாக பொங்கல் வைத்து, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கிடாய் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயன் உட்பட கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.