முத்துப்பிள்ளை அம்மன் கோயிலில் சமத்துவ அசைவ அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2026 03:02
மேலூர்; வடக்குநாவினி பட்டி மூங்கில் மேட்டில் முத்துப்பிள்ளை அம்மன் கோயில் உள்ளது. நேற்று இக்கோயிலுக்கு வடக்கு நாவினிபட்டியில் இருந்து மருளாடி எனப்படும் பெண் சாமியாடி அம்மனுக்குரிய பூஜை பொருட்களை பெட்டியில் சுமந்து முன்னே நடந்து செல்ல 4 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் பின் தொடர்ந்தனர். இன்று சுவாமி முன்பு தரையில் பரப்பப்பட்டிருந்த மல்லிகை பூ மீது மருளாடி நாகம்போல் ஆடி பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டுக்கிடாக்கள் மற்றும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட சேவலை வெட்டி பொங்கல் வைத்து படையிலிட்டனர். பிறகு சமத்துவ அசைவ அன்னதானம் நடந்தது.இதில் மேலூர் மற்றும் பல மாவட்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜாதி, மத பேதமில்லாமல் கலந்து கொண்டனர்.