காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உத்சவம்: சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2026 10:04
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. இந்த 7 நாள் உற்சவத்தில், உற்சவர் வரதராஜ பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பாசுரங்கள் மற்றும் வேத பாராயணங்களுடன் வீதியுலா வருவார். இது பண்டைய பல்லவர் கால மரபைப் பின்பற்றி நடத்தப்படும் விழாவாகும். இந்தாண்டு நடைபெற்று வரும் பல்லவ உத்சவத்தின் முதல் நாளான நேற்று, ப்ரணதார்த்தி ஹர வரதர், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு தரிசனம் செய்தனர்.