Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்பு ராமமூர்த்தி சுவாமி ... ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஹெத்தையம்மன் தேர் பவனி ஊட்டி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சிறுபாக்கம் இளங்கிளியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
அச்சிறுபாக்கம் இளங்கிளியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2026
10:04

அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.


செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் ஆட்சீஸ்வரர்திருக்கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. கோவிலில் புதியதாக அம்மன் தேர் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. அனைத்து பணிகளும் முடிந்து புதிய தேர் வெள்ளோட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதிய தேர்வெள்ளோட்டத்திற்காககோவில் வளாகத்தில், கடந்த 3ம் தேதி, யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 2 நாட்களாக வேத பாராயணம், திருமுறை பாராயணம், விசேஷ ஹோமங்கள் மற்றும் மூன்று கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, மகாதீப ஆராதனை நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜைக்கப்பட்ட புனித நீரால் அம்மன் திருத்தேருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 10:15 மணிக்கு புதியதேரின் வடத்தை பிடித்து ஆட்சீஸ்வரனுக்கு அரோகரா, இளங்கிளி அம்மனுக்கு அரோகரா, என கோஷமிட்டபடி பக்தர்கள் இழுத்தனர். நான்கு மாட வீதிகளிலும் வளம் வந்து, நிலையை வந்தடைந்தது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நம் நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு, ஹத யோகா ஆசிரியர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar