Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் விஷ்ணு ... திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா ஊர்வலம் திருக்கோவிலூர் அங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதமடைந்த திரைலோக்கியநாதர் கோவிலை புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
சேதமடைந்த திரைலோக்கியநாதர் கோவிலை புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

17 பிப்
2026
04:02

திருப்பருத்திகுன்றம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றத்தில் சேதமடைந்த திரைலோக்கியநாதர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


திருப்பருத்திக்குன்றத்தில், கி.பி., 6ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சமணர் தலமான திரைலோக்கியநாதர் கோவில் உள்ளது.  சமணர்களின் அடையாளமாக திகழும் பழமையான இக்கோவில், தமிழக தொல்லியல் துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த சமணர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணியரும் காலை, மாலையில் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் 2012ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் ராஜ கோபுரத்தில் செடிகள் வளர்ந்தும், பிற சன்னிதிகளின் மூலவர் கோபுரம், மண்டபம் உள்ளிட்டவை சேதமடைந்தும் உள்ளது. எனவே, இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக தொல்லியல் துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் திரைலோக்கியநாதர் கோவில் அறங்காவலர் நந்திமித்ரன் கூறியதாவது: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், இக்கோவிலை புனரமைக்க பூர்வாங்க பணிகள் முடிந்துள்ளன. திருப்பணியை துவக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar