அமாவாசையை முன்னிட்டு உடுமலை கோவில்களில் சிறப்பு வழிபாடு
பதிவு செய்த நாள்
18
பிப் 2026 11:02
உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், அமாவாசையையொட்டி நடந்த சிறப்பு அலங்கார பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், அமாவாசையையொட்டி, மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. எலையமுத்துார் ப்ரித்தியங்கரா தேவி கோவிலில், சத்ரு சம்கார ேஹாமம் நடந்தது. பின்னர், சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது. இதே போல், திருமூர்த்திநகர் வனதுர்க்கை அம்மன் மற்றும் உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் நடந்த சிறப்பு அலங்கார பூஜைகளில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். * மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கும், காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும், தீபாராதனையும் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வால்பாறை அடுத்துள்ள நடுமலை துண்டுக்கருப்பராய சுவாமி கோவிலில், காலை, 7:00 மணிக்கு சிறப்பு பூஜை, நெய்வேத்தியம், 8;00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுவர் பூங்கா பராசக்தியம்மன் கோவில், ஈட்டியார் மாரியம்மன் கோவில், சிறுகுன்றா மகாளியம்மன் கோவில்களில் நேற்று மாலை, அமாவாசை பூஜை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
|