குன்றக்குடி கோயிலில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா சாமி தரிசனம்.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2026 04:02
காரைக்குடி; குன்றக்குடியில் முதல்வர் ஸ்டாலின் மனைவியின் துர்கா நேற்று சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின், மீண்டும் முதல்வராக வரவேண்டி அவரது மனைவி துர்கா நேற்று இரவு பிள்ளையார்பட்டி சிறப்பு தரிசனம் செய்தார். தொடர்ந்து இன்று காலை, காரைக்குடியில் உள்ள கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குன்றக்குடி சென்றவருக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்பான வரவேற்பு அளித்தார். மடாலயத்தில் சிறப்பு சாமி தரிசனம் முடித்துவிட்டு, குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு மணிமண்டபத்தை பார்வையிட்டார். பின்பு குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் அடிவாரத்தில் நின்றபடி சாமி தரிசனம் செய்து, தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.