வில்லியனுார்: சேந்தநத்தம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் உள்வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன், தஷ்ணாமூர்த்தி, துர்கை அம்மன், காத்தவராயன் ஆகிய பரிவாரங்களுக்கு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழா கடந்த 20ம் தேதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 21ம் தேதி மாலை முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 5:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, காலை 7:30 மணியளவில் யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 7:45 மணியளவில் பரிவாரங்கள் மற்றும் ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8:00 மணியளவில் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.