Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் ... ஆழீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை ஆழீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2026
01:02

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், திருமண முகூர்த்த நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், இரண்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிப்பர். நேற்று, திருமண முகூர்த்த நாள் மற்றும் விடுமுறை நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டனர்.


முருகன் மலைக்கோவிலில் 60 திருமணங்கள், தனியார் மண்டபங்களில் 75 திருமணங்கள் என, மொத்தம் 135 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடந்ததால், திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள், புதிய தம்பதியினர் என, 1,000க்கும் மேற்பட்டோர் மூலவரை தரிசித்தனர்.


இதனால், பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்.


முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.


இதுதவிர, முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில், நேற்று காலை உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன், வெள்ளி சூர்யபிரபை வாகனத்திலும், இரவு 7:00 மணிக்கு பூத வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar