திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே சுக்காம்பட்டியில் உள்ள வாஸ்தீஸ்வரர், அர்த்தனாரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, கலச புறப்பாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு கோயில் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து சென்னை டி.நகரை சேர்ந்த கோதண்டராம கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், ஓசூர் சிவதுர்கா வித்யா பீடத்தை சேர்ந்த கணேச சிவம் தலைமையில் கோயில் கோபுர கலசங்களுக்கு காலை 8:40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக கண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் சுக்காம்பட்டி சுவாமிகள், ஆத்ம அடியார்கள், சிவனடியார் திருக்கூட்டத்தினர், ஊர் பொது மக்கள் பங்கேற்றனர்.