சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலத்தில் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. இங்குள்ள ஆத்ம நாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசி திருவிழா பிப். 21 ல் தொடங்கியது.
ஐந்தாம் நாளான இன்று காலை 9:10 மணிக்கு மேல் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
மாலை மாற்றி வைபவம், திருப்பூட்டு முடித்து பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, குன்றக்குடி ஆதினம், கிராமத்தார்கள், மண்டகப் படிதாரர்கள் செய்து வருகின்றனர்.