காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா மார்ச் 10ம் தேதி அதிகாலை 5:45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காலை 6:30 மணிக்கு காப்பு கட்டுதல், மார்ச் 17ம் தேதி கோயில் கரகம், மது முளைப்பாரி நடைபெறுகிறது. முக்கிய திருவிழாவான பால்குடத் திருவிழா மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு பூத்தட்டு காணிக்கை செலுத்தினர்.