Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  விருத்தாசலம் திரவுபதி அம்மன் ...  அய்யா வைகுண்டர் திருப்பதியில் அவதார தினவிழா கோலாகலம்  அய்யா வைகுண்டர் திருப்பதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹோலி கொண்டாட்டம் ஜாலி வண்ணங்களுடன் வந்த ‘வசந்தம்’
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹோலி கொண்டாட்டம் ஜாலி வண்ணங்களுடன் வந்த ‘வசந்தம்’

பதிவு செய்த நாள்

04 மார்
2026
09:03

 திருப்பூர்: வட இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலிப் பண்டிகை, திருப்பூர் உட்பட பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

வடமாநில மக்களின் வசந்த விழாவாகக் கருதப்படும் ஹோலிப் பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருப்பூரில் மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், ஓடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் வடமாநிலத்தினர், தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.  அதில், ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை துாவியும், பூசியும் உற்சாகமாக கொண்டாடினர். குழந்தை முதல் பெரியவர் வரை, வயது வித்தியாசம் பார்க்காமல், சிறு குழந்தைகள் போல் வண்ணப் பொடிகள் கலந்த தண்ணீரை ஊற்றி, நடனமாடி கொண்டாடினர். திருப்பூர், அவிநாசி ரோட்டில் உள்ள பிரைம் அபார்ட்மென்ட்டில் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சியுடன் ஹோலியை உற்சாகமாக வரவேற்று கொண்டாடினர். வண்ணப்பொடிகளை துாவியபடி கொண்டாடினர். இதனால், அபார்ட்மென்ட் முழுவதும் வண்ணமயமாக காட்சியளித்தது. ஈஸ்வரன் கோவில் வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வட மாநில வாலிபர்கள் உடலில் வண்ணப்பொடிகளை பூசியபடி டூவீலர்களில் வலம் வந்து ஹோலி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதேபோல், மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar