கோவை கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2026 09:03
கோவை ; சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி கோவை கோவில்களில் சனி பகவானுக்கு சிறப்பு ஹோமம் நடந்தது.இதில் கோவை ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் உள்ள நவக்கிரக சந்நிதியில் இருக்கும் சனி பகவானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. வெள்ளி காப்பு கவசத்தில் சனி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.