கடலுார்: கடலுார் துறைமுகம் உப்பனாற்றில் நடந்த மாசிமக தெப்பல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசிமகத்தையொட்டி கடலுார் துறைமுகம் சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், சிங்காரத்தோப்பு வெள்ளரி அம்மன், அக்கரைகோரி கண்ணனுார் மாரியம்மன், சலங்கைகார தெரு நாக முத்தாலம்மன், ஆற்றங்கரை வீதி ஏழை மாரியம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் சிங்காரத்தோப்பு கடற்கரையில் எழுந்தருளச் செய்து, தீர்த்தவாரி நடந்த து. இரவு ஐந்து சாமிகளும் மின்விளக்கு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தனித்தனி படகுகளில் துறைமுகம் உப்பனாற்றில் எழுந்தருளச் செய்து, தெப்பல் உற்சவம் நடந்தது . ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதே போல் தைக்கால் தோணித்துறை கருப்பு முத்துமாரியம்மனுக்கு பரவனாற்றில் தெப்பல் உற்சவம் நடந்தது.