திருக்கோவிலூரில் 18ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2026 12:03
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் ஜீயர்கள் சமாதியின் அருகே 19ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவரும், கல்வெட்டு ஆய்வாளருமான உதியன் தலைமையில், சிறப்பு தலைவர் விழுப்புரம் வீரராகவன், பண்ருட்டி இமானுவேல், சங்கர் உள்ளிட்ட குழுவினர் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள ஜீயர்கள் சமாதியின் அருகே வெட்டப்பட்டு இருந்த பாறை கல்வெட்டையும், மருந்து தயாரிக்க பயன்படும் குழியினையும் கண்டறிந்தனர்.
இது குறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன் கூறியதாவது; திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் தென்புற கரையோரம் ஜியர்கள் சமாதி உள்ளது. இதன் அருகில் பாறை கல்வெட்டுகள் உள்ளது. அதன் அருகில் மருந்து தயாரிக்க பயன்படும் பகுழியும் கண்டறியப்பட்டது. கல்வெட்டில் வீ ராகவை ஐயர் தர்மம் என பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு கீழே மருந்து தயாரிக்க பயன்படும் குழியையும் அமைத்து இவர் பெயரில் தர்மம் என்று வெட்டி வைத்துள்ளனர். இது மருத்துவ குழி. பாறைக்கு அருகில் ஜீயர் சமாதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 15 ம் நூற்றாண்டில் இருந்து ஜீயர் சமாதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. பதினெட்டாம் பட்டம் ஜீயரின் பெயர் வீரராகவ ஐயர் என்பதாகும். இவர் 1828 முதல் 1842 ஆம் பட்டம் வகித்தவர். அவருடைய தர்மமாகவும் கூட இருக்கலாம் என்று தெரிகிறது. இப்ப பாறைக்கு அருகில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் ஈமத்தாழின் உடைந்து சிதறிய பகுதிகள் மேற்பரப்பில் காணப்படுகிறது. தொடர்ந்து இப்பகுதியை ஆய்வு செய்தால் தொன்மை வரலாற்றை அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.