சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள், கடந்த 4ம் தேதி முதல், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் ஆன்மிக பயணம் மேற்கொண் டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பதி வருகிறார். வரும் 14ம் தேதி வரை நான்கு நாட்கள், திருப்பதியில் உள்ள ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில் தங்குகிறார். அங்கு அவர், பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். வரும் 15ம் தேதி பெங்களூரு செல்கிறார். அடுத்து 16ம் தேதி கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், உங்ராவில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, வரும் 17ம் தேதி சிருங்கேரி செல்வார் என, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சங்கராச் சாரியாரின் தனிச் செயலர் தெரிவித்துள்ளார்.