Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரி ஸ்ரீவிதுசேகர பாரதி ... உயர்ந்த ஆன்மாக்களை பெருமான் ஆட்கொள்வார் உயர்ந்த ஆன்மாக்களை பெருமான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்

பதிவு செய்த நாள்

11 மார்
2026
12:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம் நடக்கிறது.


காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான மாசி மாத பிரம்மோத்சவம் கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், தினமும், காலை, மாலையில், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காமாட்சியம்மன், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா வந்தார். இதில், ஏழாம் நாள் உத்சவமான கடந்த மாதம் 27ம் தேதி தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உத்சவமான மார்ச் 1ம் தேதி இரவு வெள்ளி தேரோட்டமும் விமரிசையாக நடந்தது. 10ம் நாளான மார்ச் 2ம் தேதி காலை பஞ்சகங்கை தீர்த்தத்தில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் தீர்த்தவாரி உத்சவம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து, மார்ச் 3ம் தேதி இரவு தங்க காமகோடி விமான உத்சவம் நடந்தது. மார்ச் 4ம் தேதி முதல், விடையாற்றி உத்சவம் நடந்து வருகிறது. இதில், எட்டாம் நாளான இன்று இரவு 7:00 மணிக்கு சந்தனகாப்பு உத்சவம் நடக்கிறது. மாசி மாத பிரம்மோத்சவத்தின் நிறைவாக நாளை இரவு 8:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு உத்சவம் நடக்கிறது. இதில், மல்லி, முல்லை, கனகாம்பரம், தவனம், சம்பங்கி என, பல வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் காமாட்சியம்மன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar