ஓரிக்கையில் இந்தியன் வங்கி கிளை காஞ்சி மடாதிபதி திறந்து வைத்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2026 05:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கையில், இந்தியன் வங்கியின் புதிய கிளையை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி சாலை, இந்தியன் வங்கியின், ஓரிக்கை புதிய கிளை திறப்பு விழா, சென்னை மண்டல கள பொது மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்தது. மண்டல மேலாளர் ஸ்ரீமதி, துணை மண்டல மேலாளர் லீலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திலீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், குத்து விளக்கேற்றி, புதிய வங்கி கிளையின் கல்வெட்டை திறந்து வைத்தார்.