பதிவு செய்த நாள்
12
ஜன
2013
12:01
கடமையைப் பெரிதென மதிக்கும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் நான்காம் இடத்தில் அனுகூலக் குறைவாக இருப்பினும், சூரியன், சுக்கிரன், குரு, கேதுவின் அமர்வு நற்பலன்களை வழங்கும் வகையில் உள்ளது. உற்சாகமான சூழ்நிலை அமைந்து கூடுதல் வளம்பெற தேவையான பணிபுரிவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு, உறவினர் வருகை ஆகியவற்றால் சந்தோஷம் வளரும். அதிக சொத்து வாங்க அனுகூலம் உண்டு. உடல்நலம் சுமாராக இருக்கும். நன்னடத்தை குறைவான சிலர் உங்களை புகழ்ந்து பேசி காரியம் சாதிக்க முயற்சிப்பர். அவர்களிடம் முன் யோசனையுடன் நடந்து கொள்ள வேண்டும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். நண்பர்கள் சொல்கிற ஆலோசனை உங்கள் மனதில் நல்ல மாற்றங்களை உருவாக்கும். தொழிலதிபர்கள் கவனத்துடன் செயல்பட்டு உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் அடைவர். புதிய ஒப்பந்தம் கிடைத்து லாபம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகி தாராள பணவரவு இருக்கும். பணியாளர்கள் பணித்திறமையை வளர்த்து பணிகளை எளிமையாக செய்து முடிப்பர். நிலுவைப்பணி நிறைவேறி சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். வீட்டுச்செலவுக்கு தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பணிபுரியும் பெண்கள் பணிகளை விரைந்து முடித்து அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள், புதிய தொழில் உபகரணங்கள் வாங்க வழி பிறக்கும். உற்பத்தி, தரம் உயர்ந்து விற்பனை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் புதிய பதவி பெறுவதற்கான முயற்சியில் பலன் அடைவர். விவசாயிகளுக்கு மகசூல் அதிகமாகும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் வெளியிடங்களில் சுற்றுவதைக் குறைத்து படிப்பில் கவனம் செலுத்துவர். உயர்ந்த மார்க் கிடைக்கும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.
உஷார் நாள்: 23.1.13 இரவு 9.21- 26.1.13 காலை 8.32.
வெற்றி நாள்: பிப்ரவரி 9, 10
நிறம்: சிவப்பு, பச்சை எண்: 1, 9