நடுநிலையுடன் நடக்கும் எண்ணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நற்பலன் வழங்குகிற வகையில் உள்ளார். புதன் மாத முற்பகுதியில் தாராள பலன்களைத் தருவார். எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பணவசதி துணைநிற்கும். பூர்வ சொத்துக்களில் வருமானம் பெறுபவர்களுக்கு பணவரவு கொஞ்சம் அதிகரிக்கும். புத்திரர்கள்சிறப்பாகப் படித்து பெற்றோருக்கு மனதில் நிம்மதி ஏற்படுத்துவர். உடல்நிலை ”மாராக இருக்கும். கடன்கள் நிர்ப்பந்தம் செய்யும். அதில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் குடும்பப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர். மகிழ்ச்சியும் நன்மையும் நிறைந்திருக்கும். நண்பர்களும் ஒத்துழைப்பர். தொழிலதிபர்கள் நிதியுதவி கிடைத்து அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி உயர்ந்து புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு, சுணக்கநிலை மாறி விற்பனை சுறுசுறுப்பு அடையும். லாபம் அதிகரித்து முக்கிய செலவு களுக்கு உதவும். பணியாளர்கள் சக பணியாளர்களிடம் தொழில்நுட்பம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துகொள்வர். பணிகள் சீராக நிறைவேறும். குடும்பப் பெண்கள் கணவரின் எண்ணங்களை மதித்து செயல்படுவர். செலவில் சிக்கனம் கடைபிடித்து சேமிப்பை அதிகரிப்பர். பணிபுரியும் பெண்கள் லட்சிய மனதுடன் செயல்புரிந்து அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர். ஓரளவு சலுகை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர் மனப்பாங்கு உள்ளவர் களிடம் விலகுவது நல்லது. விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர். படிப்பை முடித்தவர்களுக்கு @வலைவா#ப்பு கிடைப்பதில் இருந்த தடங்கல் நீங்கும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி பெறும். உஷார் நாள்: 21.1.13 காலை 8.42-23.1.13 இரவு 9.20. வெற்றி நாள்: பிப்ரவரி 6, 7, 8 நிறம்: ஆரஞ்ச், ஊதா எண்: 6, 9
மேலும்
ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »