Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குண்டத்து காளியாதேவி கோவிலில் ... மருதமலையில் இரண்டு ஆண்டுக்குப்பின் நடந்த தங்கத்தேரோட்டம் மருதமலையில் இரண்டு ஆண்டுக்குப்பின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி.,பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா: ஏராளமானோர் தீ மிதித்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி.,பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா: ஏராளமானோர் தீ மிதித்தனர்

பதிவு செய்த நாள்

18 மார்
2026
06:03

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் நடந்த பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.


இக்கோயிலில் பூக்குழி திருவிழா மார்ச் 7 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அம்பாள் மண்டபம் எழுந்தருளல், இரவு வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதலை முன்னிட்டு இன்று அதிகாலை பட்டத்தரசி அம்மன் கோயிலில் தீ வளர்க்கபட்டு பெரிய மாரியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு அக்கினி குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டது. அதிகாலை முதல் காப்பு கட்டி பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து ரதவீதி சுற்றி வந்து வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மதியம் 1:35 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதலை, தக்கார் சக்கரையம்மாள், செயல் அலுவலர் ஜோதிலட்சுமி கொடியசைத்து துவக்கினர். பூஜாரி சுந்தர் முதலில் இறங்க, அவரைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர். விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். டி‌.எஸ்.பி.பாலசுந்தரம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று மதியம் 12:30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.


குளிர்வித்த சாரல் மழை; நேற்று வரை நகரில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. பூக்குழி நாளான இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் இல்லாமல் மேகமூட்டத்துடன் இதமான தட்பவெப்ப சூழ்நிலை நிலவியது. சரியாக பூக்குழி இறங்கும் நேரத்தில் கருமேகம் சூழ்ந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டது. மதியம் 2:40 மணிக்கு மேல் சாரல் மழை பெய்தது.


பக்தர்கள் வேதனை: பல ஆயிரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்த நிலையில், பல்வேறு அரசுத் துறையை சேர்ந்தவர்களின் உறவினர்கள் வரிசையில் நிற்காமல், கோயில் அதிகாரிகளை பின்தொடர்ந்து வந்து நேரடியாக பூக்குழி இறங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar