Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் அபிராமேஸ்வரர் ... திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் திருப்பாதிரிப்புலியூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கோலாகல துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கோலாகல துவக்கம்

பதிவு செய்த நாள்

24 மார்
2026
10:03

சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்களில் பங்குனிப் பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.


கபாலீஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு, நேற்று காலை கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், விநாயகர், சிங்காரவேலர், சண்டிகேஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து, திரளாக வந்த பக்தர்களின் சிவநாமம் விண்ணை பிளக்க கொடியேற்ற நிகழ்வு நடந்தது. நாளை காலை அதிகாலை 6:00 மணிக்கு அதிகாரநந்தி காட்சி; 29ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்கிறார். வரும், 30ம் தேதி திருஞான சம்பந்தர் எழுந்தருளல், எலும்மை பூம்பாவையாக்கி அருளல் நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் 63 நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது. ஏப்., 1ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. 


மருந்தீஸ்வரர் கோவில் அதேபோல, மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை அதிகார நந்தி சேவையும், 29ம் தேதி காலை 7:10 மணிக்கு சந்திரசேகரர் தேர்திருவிழாவும், பிரம்மனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பரிவேட்டை விழா வரும் 30ம் தேதியும், 31ம் தேதி கல்யாணசுந்தரர் திருக்கல்யாணமும், ஏப்., 1ம் தேதி திரிபுரசுந்தர சுந்தரி- தியாகராஜர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்று இரவு 9:00 மணிக்கு கொடியிறக்கத்துடன், வால்மீகி முனிவருக்கு, 18 திருநடனக் காட்சியருளி வீடுபேறு அளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் கடைசி நாளான ஏப்., 2ம் தேதி சந்திரசேகர் தெப்பத் திருவிழா, வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, 18 திருநடன காட்சி, பெருஞ்சிறப்பு விழா ஆகியவை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar